அதிமுக பொதுக்குழுக் கூட்டம் : டிடிவி தினகரன் எச்சரிக்கை

Updated Time : 01-09-2017 10:31 AM Print

சென்னை:
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை அறிவித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
செப்டம்பர் 12ம் தேதி பொதுக்குழு என்ற பெயரில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி கூட்டியுள்ள கூட்டத்திற்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Updated Time : 01-09-2017 10:31 AM Print


