ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் சசிகலா குடும்பம் : ஆறுகுட்டி எம்எல்ஏ குற்றச்சாட்டு

Updated Time : 23-08-2017 14:22 PM Print

கோவை :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனும், திவாகரனும் யார்? அவர்கள் அதிமுக.,விற்காக போராடினார்களா அல்லது சிறை சென்றார்களா என கேள்வி எழுப்பினார்.
அதிமுக.வில் கடுமையாக உழைத்து வரும் வைத்திலிங்கத்தை கட்சியில் இருந்து நீக்க சசிகலா யார்? தினகரன், திவாகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்திற்கு அதிமுக.,வில் இனி இடம் கிடையாது எனவும் அவர் கூறினார்.
ஓபிஎஸ், இபிஎஸ் பற்றி விமர்சிக்க நாஞ்சில் சம்பத்திற்கு தகுதி இல்லை என்றும் ஆறுகுட்டி தெரிவித்தார். சசிகலா குடும்பத்தால் வந்த சொத்து குவிப்பு வழக்கின் காரணமாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Updated Time : 23-08-2017 14:22 PM Print


