
இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில்தான் மிக அதிகம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், 50 வயதை தாண்டியவர்கள் 25 சதவிகிதமும், 40 வயதைத் தாண்டியவர்கள் 15 சதவிகிதமும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கம், புகை பிடிக்காமை, மது அருந்தாமை, இவற்றுடன் 8 மணி நேர தூக்கம் போன்றவற்றை பின்பற்றினால், இதய நோய் நம்மை நெருங்காது.
மனம்விட்டுச் சிரிக்கும் போது, நம் உடலில் நன்மை பயக்கும் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள், ரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்கட்டி கரைத்து, இதய நோய் ஆபத்துகளை குறைக்கும். எனவே, மனம் விட்டு சிரிப்பது, இதயத்துக்கு மிகவும் நல்லது.
காலையில் எழுந்தவுடன், அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவும் குறையும். இதன் காரணமாகவும், இதய நோய் ஆபத்துக்கள் குறையும்.
Updated Time : 18-08-2017 10:20 AM Print


