
சென்னை:
பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.
நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ரத்தத் திலகம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சண்முக சுந்தரம். அதனை தொடர்ந்து, நத்தையில் முத்து, இதயக்கனி, ஆதித்யன், குறத்தி மகன், மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, லட்சுமி கல்யாணம், வாழையடி வாழை, அவளுக்கு நிகர் அவளே ஆகிய படங்களில் நடித்துள்ளார், 'கரகாட்டக்காரன்' படம் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது.
சென்னை 60028, தமிழ் படம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் சிம்பு நடித்த, 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' இவரது கடைசிபடம்.
கடந்த ஒரு மாதமாக உடல் பாதிக்கப்பட்டிருந்த சண்முக சுந்தரம் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஆக. 16)நடைபெறுகின்றன.
Updated Time : 16-08-2017 09:47 AM Print


