
ஜோகனஸ்பர்க்:
250 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை திருடிய வழக்கில், தென்னாப்ரிக்காவை சேர்ந்த, இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள் 4 பேருக்கு சர்வதேச போலீசார் 'பிடிவாரண்ட்' பிறப்பித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள் 4 பேர், ஆபூர்வ வகையைச் சேர்ந்த 250 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை திருடியதாக லெபனானில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் உள்ளிட்ட, பிற நாட்டு நீதிமன்றங்களிலும், 4 பேருக்கு எதிரான இதேபோன்று வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்ய இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசார் கைது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள 4 பேரும், தங்களிடம் இருந்து வைரத்தை, அவர்களது நண்பர் ஒருவர் திருடி சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.
Updated Time :
16-08-2017 05:22 AM
Print