
சென்னை, ஆக. 16:
தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று காலை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர், அதன் பின்னர் கடந்த 7 மாதங்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகள் முடிந்ததும், அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated Time :
16-08-2017 04:19 AM
Print