
சென்னை :
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இதன் முடிவுகள் இன்று வெளியானது. இதில், மொத்தம் 94. 4 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.2 சதவீத மாணவிகளும், 92.5 சதவீத மாணவர்களும் தேர்வு பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 0.8 சதவீதம் கூடுதலாக மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருநங்கை ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கணிதத்தில் 13,759 பேரும், அறிவியலில் 17, 481 பேரும், சமூக அறிவியலில் 61,115 பேரும், தமிழில் 69 பேரும் 100 க்கு 100 பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களிலும் வெயியிடப்பட்டன. மாணவ, மாணவிகள் கொடுத்துள்ள மொபைல்போன் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்வை போன்று, பத்தாம் வகுப்பு தேர்விலும் மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களுக்கான பட்டியல் வெளியாகவில்லை.


