பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் – பிரதமர் மோடியின் மனைவி வேண்டுகோள்

Updated Time : 23-04-2017 13:37 PM Print

பாட்னா, ஏப். 23 :
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியை நாடு மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடியின் மனைவி யாசோதா பென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் மனைவியான யசோதா பென், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பீகார் சென்ற அவர், பாட்னாவில் சாகு இன மக்களிடையே உரையாற்றினார். அப்போது, சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க சமூகம் முன்வர வேண்டும். இதற்கான முயற்சியை நாடும், மக்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
Updated Time : 23-04-2017 13:37 PM Print


