லண்டனில் கைதான விஜய் மல்லையா, ஜாமினில் விடுவிப்பு!

Updated Time : 18-04-2017 21:12 PM Print

லண்டன்:
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தவில்லை. இந்த நிலையில், அவர் லண்டன் தப்பி சென்றார். இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தவும் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், லண்டனில் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர். பண மோசடி வழக்கில், இந்திய அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று கைது செய்ததாக போலீசார் கூறினர்.
இதனை தொடர்ந்து, வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மல்லையா உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
Updated Time : 18-04-2017 21:12 PM Print


