ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவேன்: தீபா திட்டவட்டம்

Updated Time : 09-03-2017 21:47 PM Print

சென்னை, மார்ச் 09:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன். மக்கள் எனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைப்பார்கள் என நம்புகிறேன். தி.மு.க., சசிகலா குடும்பத்தினர் தவிர யார் ஆதரவு அளித்தாலும் ஏற்பேன். பன்னீர்செல்வத்தை சந்தித்தது மரியாதை நிமித்தமாக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Updated Time : 09-03-2017 21:47 PM Print


