
புதுடெல்லி, மார்ச் 07 :
வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்காவிட்டால், அபராதம் வசூலிக்கக் கூடாது என பாரத ஸ்டேட் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கப்படாவிட்டால், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் அறிவித்தது. இதனால், அந்த வங்கியின், 31 கோடி சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், இந்த திட்டத்தை, மறுபரிசீலனை செய்யும்படி, பாரத ஸ்டேட் வங்கியை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பணப் பரிவர்த்தனை, ஏ.டி.எம்., மூலம் பணம் எடுத்தல் ஆகியவற்றின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகளையும் மறுபரிசீலனை செய்யும்படி, பாரத ஸ்டேட் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Updated Time : 07-03-2017 13:00 PM Print


