கடும் வறட்சி : வீராணம் ஏரியில் இருந்து தண்ணீல் திறப்பது நிறுத்தம் - சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஆபத்து

Updated Time : 20-02-2017 12:23 PM Print

சென்னை, பிப். 20 :
கடும் வறட்சி காரணமாக, வீராணம் ஏரி வறண்டுள்ளது. இதன் காரணமாக, அங்கிருந்து சென்னைக்கு குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் கிருஷ்ணா நதிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே, சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
எனினும், என்எல்சி சுரங்க நீர் சென்னைக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Updated Time : 20-02-2017 12:23 PM Print


