முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீடு மீது தாக்குதல் : ஒருவர் காயம்

Updated Time : 16-02-2017 18:04 PM Print

சென்னை:
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஒருவர் காயம் அடைந்தார். காவல்துறையினர் சிலரும் இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
அதேநேரத்தில் புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்தனர்.Updated Time : 16-02-2017 18:04 PM Print


