முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு செம்மலை ஆதரவு!

Updated Time : 14-02-2017 09:54 AM Print

சென்னை , பிப். 14 :
முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு செம்மலை எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேட்டூர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவான செம்மலை, முன்னாள் அமைச்சராக இருந்தவர். சசிகலா அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்துள்ளார் செம்மலை.
இதன்மூலம் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்கும எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.Updated Time : 14-02-2017 09:54 AM Print


