கம்பமேளா : அவசரச் சட்டம் கொண்டுவந்தது கர்நாடகா

Updated Time : 12-02-2017 07:28 AM Print

பெங்களூரு, பிப். 12 :
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பமேளாவை நடத்த கர்நாடகா அரசு சார்பில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்று, கர்நாடக மாநிலத்தின் கம்பளா என்ற பாரம்பரிய விளையாட்டு நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டில், எருமை மாடுகளை சேற்றில் ஓடவிடும் பந்தயம் நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டுவை போல, கம்பமேளாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, கம்ப மேளாவை நடத்த கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது.
இதற்கான மசோதா, கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், கம்பமேளா விளையாட்டு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Updated Time : 12-02-2017 07:28 AM Print


