
அரக்கோணம், பிப். 08 :
அரக்கோணம் அருகே பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 25 பயணிகள் பலத்தக் காயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி ஓர் தனியார் பேருந்து சென்றது. அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் அரக்கோணம் அருகே பள்ளூர் எனும் இடத்தில் வளைவில் திரும்பியபோது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகள் பலத்தக் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தை ராணிப்பேட்டை கோட்டாட்சியர் முருகேசன், அரக்கோணம் வட்டாச்சியர் குமரவேல் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வேலூர் மத்திய கூட்டுறவுவங்கி தலைவர் விஜயன் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் : அரக்கோணம் சரவணன்


