
சென்னை
முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் அதிரடி பேட்டியை அடுத்து, சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக போயஸ் கார்டன் விரைந்துள்ளதாகவும் தெரிகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சசிகலாவுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
முன்னதாக, முதல்வர் பன்னீர் செல்வம் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
திடீரென எம்ஏல்க்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இது எனக்கு தெரியாது.
முதல்வர் பதவியை விட்டுதருமாறு என்னை கட்டாயப்படுத்தினர்.
மீறினால் கட்சி விதியை மீறியதாக ஆகிவிடும் என கூறினர்.
கட்சி நலனுக்காக பொறுமையாக இருந்தேன்.
மக்கள் ஆதரவு பெற்ற ஒருவரே, முதல்வராக வரவேண்டும்.
தனிப்பட்ட முறையில் என்னை அவமானப்படுத்தினால் தாங்கிகொள்வேன்.
எனது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனை பலரிமும் சொல்லி வருத்தப்பட்டேன்.
இதனை விளம்பரப்படுத்த விரும்பவில்லை.
Updated Time : 07-02-2017 22:52 PM Print


