
சென்னை :
ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தை முடித்த பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் முதல்வர் பன்னீர்செல்வம். அதன் முக்கிய அம்சங்கள் :
அதிமுக தொண்டர்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். வர்தா புயல் பாதிப்பை 4 நாளில் சரிசெய்ததால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனால், சசிகலா தரப்பினர் எரிச்சல் அடைந்தனர்.
குடிநீர் பிரச்னைக்காக ஆந்திரா சென்று தீர்த்து வைத்தேன்.
என்னை முதல்வராக வைத்துகொண்டு சசிகலா தரப்பினர் அவமானப்படுத்துகின்றனர். கட்சியின் நிலையை கண்டு தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். எனது மனநிலை பாதிக்கப்பட்டது.
என்னால் எந்த பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இதுகுறித்து பேசவில்லை. இந்த சூல்நிலையில்தான் எம்எல்ஏக்கள் நடைபெற்றது. அவர்களிடம் கையெழுத்து பெற்றார்கள். இது எனக்கு தெரியாது.
பின்னர் போயஸ்கார்டன் வரவழைத்தார்கள். மூத்த அமைச்சர்கள் அனைவரும் அங்கு இருந்தனர். அப்போது, சசிகலா முதல்வராக வேண்டும் என அனைவரும் கூறினார்கள். என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர்.
Updated Time : 07-02-2017 22:23 PM Print


