வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை : முதல்வர் உறுதி

Updated Time : 27-01-2017 16:13 PM Print

சென்னை, ஜன. 27 :
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் அளித்து முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கான, சட்ட வரைவு டெல்லியிலேயே தயாரிக்கப்பட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையிலி, மாணவர்களின் அமைதியான போராட்டத்தை சமூக விரோத திசைதிரும்பியது. இதன் காரணமாக, ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தை சமூக விரோதிகள் தீவைத்து எரித்தனர். இந்த வன்முறையில் போலீசார் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Updated Time : 27-01-2017 16:13 PM Print


