
சென்னை :
இன்னும் 10 ஆண்டுகளில் செயற்கை சிறுநீரகம், மருத்துவத்துறையின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மனிதர்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று சிறுநீரக செயலிழப்பு. குறிப்பாக, ஆண்களை இந்த பாதிப்பு படாதபாடு படுத்துகிறது.
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எனினும, இந்தியாவில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் பேர் சிறுநீரக நோயால் உயிரிழக்கின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய விஞ்ஞானிகள், கலிபோர்னியா சான்பிரான்சிஸ்கோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயற்கை சிறுநீரகத்தை தயாரித்துள்ளனர்.
இந்த செயற்கை சிறுநீரகம், இதயத்தின் செயல்பாட்டின் ஆற்றல் மூலம் ரத்த சுத்திகரிப்பு, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், ஹார்மோன் உற்பத்தி உள்ளிட்ட சிறுநீரகத்தின் வேலைகளை செய்யும். இந்த செயற்கை சிறுநீரகம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated Time : 27-01-2017 13:53 PM Print


