
புதுடெல்லி, ஜன. 25 :
தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான குடியரசுத் தலைவர் விருதை தமிழகம் பெற்றுள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. இதில் 2016 ம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான விருதை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பெற்றார்.
தேர்தல் செலவினங்களை சிறப்பாக கண்காணித்ததற்காக தமிழ்நாடு மண்டல வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் ராய்ஜோஸ் விருது வழங்கப்பட்டது. இளம் வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததற்காக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பழனிச்சாமி பெற்றார்,
அனைத்து தரப்பினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராக ராவிற்கும் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது.
Updated Time : 25-01-2017 16:18 PM Print


