தீவிரமாகும் ஜல்லிக்கட்டு போராட்டம்: பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் பன்னீர்செல்வம்!

Updated Time : 18-01-2017 21:40 PM Print

சென்னை, ஜன. 18 :
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமாகி வரும் நிலையில், இதுகுறித்து நாளை பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசவுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். சட்டதிருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.அவசர சட்டத்தினை பிறப்பிக்கும்படி பிரதமரை வலியுறுத்த உள்ளேன்.மாணவர்கள் இளைஞர்களின் போராட்டம் நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Updated Time : 18-01-2017 21:40 PM Print


