ரஞ்சி கோப்பை : குஜராத் சாம்பியன்

Updated Time : 14-01-2017 21:44 PM Print

இந்துார், ஜன. 14 :
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
இந்துாரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நடந்தது.இதில் மும்பை, குஜராத் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 228, குஜராத் 328 ரன்கள் எடுத்தன. மும்பை அணி இரண்டாவது இன்னிங்சில் 411 ரன்கள் எடுத்தது. 312 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய குஜராத் அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்ததது. சமித் கோயல் (8), பன்சால் (34) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இன்று ஐந்தாம் மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டமுடிவில், குஜராத் அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Updated Time : 14-01-2017 21:44 PM Print


