மருந்துச் சீட்டுகளை மருத்துவர்கள் கைகளால் எழுதக்கூடாது : வங்கதேச நீதிமன்றம் உத்தரவு

Updated Time : 12-01-2017 13:48 PM Print

தாகா, ஜன. 12 :
மருத்துவர்கள், மருந்துச் சீட்டுக்களை கைகளால் எழுத தடை விதித்து வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருந்து விவரங்களை அச்சிட்டு அல்லது டைப் செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கைகளால் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மருந்து விவரங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாக எழுத வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த உத்தரவை சுகாதாரத் துறையினர் கண்காணித்து 3 மாதத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.
வங்கதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Updated Time : 12-01-2017 13:48 PM Print


