இனி, மருந்து விற்பனைக்கும்‘பார்கோடு’ : மத்திய அரசு பரிசீலனை

Updated Time : 07-08-2016 12:31 PM Print

புதுடெல்லி, ஆக. 07 :
மருந்து விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, ‘பார்கோடு’ முறையை கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதன்மூலம், மருந்து கடைக்காரர்கள், மருந்து அட்டையில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை மட்டுமே பொதுமக்களிடம் வசூலிக்க முடியும்.
வரிகளை உள்ளடக்கிய அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில், வரி உள்ளிட்ட அம்சங்களை கூறி, பொதுமக்களை கடைக்காரர்கள் இனி ஏமாற்ற முடியாது.
இதனால், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மருந்து கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Updated Time : 07-08-2016 12:31 PM Print


