சுவாதி கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை - ஜாமின் மனுவில் ராம்குமார் மறுப்பு

Updated Time : 05-07-2016 16:28 PM Print

சென்னை, ஜூலை 5 :
சுவாதி கொலைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இர்லை என அவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி, ராம்குமார் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், எனக்கும். சுவாதி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என்றார்.
காவல்துறையினருடன் சென்ற நபர்கள் தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Updated Time : 05-07-2016 16:28 PM Print


