
நெல்லை, ஜூலை 02 :
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் காயங்கள், ஓரிரு நாட்களில் குணமாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, ராம்குமாரை போலீசார் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். அப்போது, ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராம்குமாரின் உடல்நிலை குறித்து அரசு மருத்துவமனை டீன் சித்திக் ஆதித்யா கூறுகையில், ராம்குமாரின் கழுத்து பகுதியில் 5.செ.மீ., ஆழத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தற்போது மயக்க நிலையில் உள்ள ராம்குமார் காவல்துறை பாதுகாப்புடன் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இன்னும் ஓரிரு நாளில் ராம்குமாரின் காயங்கள் சரியாகி அவர் பேச துவங்கி விடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Updated Time : 02-07-2016 11:42 AM Print


