இந்தியாவில் அமேசான் ரூ.20,000 கோடி முதலீடு!
வாஷிங்டன், ஜூன், 9 ;
Updated Time : 09-06-2016 12:17 PM Print

இந்தியாவில் சர்வதேச இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் சுமார் ரூ.20,000 கோடியை (300 கோடி டாலர்) முதலீடு செய்ய திட்ட மிட்டிருப்பதாக அதன் நிறுவனர் ஜெப் பியோஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் கடந்த 20 வருடங்களில் அமெரிக்காவில் அமேசான் என்ன செய்ததோ அதனை இந்தியாவில் செய்ய திட்ட மிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், அதற்கான கால நிர்ணயம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் இன்னொரு முக்கிய நிறுவனமான அலிபாபா இந்தியாவில் நேரடியாக இ-காமர்ஸ் நிறுவனம் தொடங்க திட்டமிட்டிருப்பதால், அமேசான் கூடுதல் முதலீடு செய்கிறது என்று கூறப்படுகிறது.
Updated Time : 09-06-2016 12:17 PM Print


