சென்னை:
ஆன்லைன் மூலம் பண்டமாற்றம் செய்யும் சேவையை பார்ட்டர்கியா இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் பழைய காலங்களில் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்தது. இந்த முறையின்படி, நாம் பயன்படுத்திய ஒரு பொருளை மற்றவருக்கு கொடுத்துவிட்டு, அவரிடம் உள்ள நமக்கு தேவையான பொருளை நாம் பெற முடியும். இதன் மூலம், இருவருமே பரஸ்பரம் பயன்பெற முடியும்.
காலப்போக்கில் வழக்கொழிந்துபோன இந்த சேவை முறையை, தற்போதைய நவீன யுகத்துக்கு ஏற்ப அறிமுகம் செய்துள்ளது பார்ட்டகியா (BARTERKIYA) இணையதளம். இந்தியாவின் புரட்சிகரமான மொபைல் அப்ளிகேஷனாகவும் மற்றும் போர்டலாகவும் திகழும் பார்ட்டர்கியா, தற்போது இந்த சேவையை துவக்கியுள்ளது.
அதன்படி, பார்ட்டர்கியா வாடிக்கையாளர்கள் இதன் செயல்தளத்தில் தொடர்புகொண்டு, தாங்களே தங்களது பொருட்களுக்கு சிறப்பான விலையை நிர்ணயம் செய்ய முடியும்.
இதற்காக, பதிவு செய்யப்பட்ட பயனாளிகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் மற்றும் அதற்கு மாற்றாக வாங்க விரும்பும் பொருட்களையும் காட்சிப்படுத்தும் வாய்ப்பினை பார்ட்டகியா வழங்குகிறது. இதன்மூலம், இரு தரப்பிற்கும் ஆதாயம் கிடைப்பது சாத்தியமாகிறது.
ஒருவேளை, நமக்கு தேவையான பொருட்கள் கிடைக்கவில்லையெனில், “டிரையாங்குலர் மேட்சிங்” என்ற முறையில் நமக்கு விருப்பமான பொருளை கண்டுபிடிக்க முயற்சி செய்யப்படுகிறது.
இணையதள வர்த்தக உலகில் இந்த புதிய சேவை குறித்து, பார்ட்டர்கியா இணையதளத்தின் இயக்குனர் நல்லூர் ராமன் வெங்கடேசன் கூறுகையில், ஆன்லைன் கிளாசிஃபைட்ஸ் தொழில்துறையிலுள்ள பெரிய நிறுவனங்கள் பண்டமாற்று பரிவர்த்தனைகள் மீது குறைவான கவனத்தையேகொண்டுள்ளன என்றார்.
பணம் செலுத்தாமல், வாங்கும் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை வழங்க விரும்பும் மக்கள் அதிகளவில் இந்நாட்டில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பார்ட்டர்கியாவின் வழியாக, ஒரு வாடிக்கையாளர் அவரது பொருட்களை எதிர்காலத்தில் சிறப்பான விலையைப் பெறும் வகையில் ஏலம் விடலாம். உங்கள் பொருளை பட்டியலில் முன்னிலையில் வைப்பபதற்ணகாக பணம் செலுத்தும் சேவைகளையும் பயன்படுத்தலாம் என்றும் அவர் விளக்கினார்.
சென்னையில் தற்போதுஅறிமுகம் செய்யப்பட்டுள்ள பார்ட்டர்கியா,விரைவில் இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டநகரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றும் நல்லூர் ராமன் வெங்கடேசன் கூறினார்.
சிறப்பு செய்தியாளர் : M.வெங்கட்ராமன்


