தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
வணிகம்
விரைவில் புழக்கத்திற்கு வருகிறது ரூ.200 நோட்டு!

மும்பை :

செப்டம்பர் மாதம் 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.

இந்த புதிய ரூ.200 நோட்டுக்கள் ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர்...மேலும் காண

111வது ஆண்டு விழா முன்னிட்டு, 111 வர்த்தக மையங்களை திறந்தது இந்தியன் வங்கி

சென்னை

இந்தியன் வங்கியின் 111வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 111 வர்த்தக மையங்கள் புதியதாக திறக்கப்பட்டுள்ளன.

இந்தியன் வங்கி, கடந்த 1907ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் 111வது ஆண்டு விழா, ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 19ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற...மேலும் காண

ஜி.எஸ்.டி. தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் : விக்கிரமராஜா

சென்னை, ஆக. 09:

ஜி.எஸ்.டி. தொடர்பாக மாநில அரசு வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள்...மேலும் காண

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

சென்னை, ஜூலை 31:

2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என்றும், இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்களில் தங்கள் கணக்குகளை சமர்ப்பிக்கலாம்...மேலும் காண

பரோடா வங்கியின் 110வது நிறுவனர் தினம் - சிறப்பு அழைப்பாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். பங்கேற்றார்

சென்னை, ஜூலை 21 :

பரோடா வங்கியின் 110வது நிறுவனர் தினம், சென்னையில் நேற்று (ஜூலை 20 வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று காலை நடை பேரணி நடைபெற்றது. இதனை, வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் வி.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்....மேலும் காண

“என் தொழில் வளர்ச்சிக்காக மற்றவரின் தொழிலை சீர்குலைக்க மாட்டேன்” : எப்என்சிஜி விநியோகஸ்தர்கள் உறுதிமொழி

சென்னை, ஜூன் 18 :

தமது தொழிலை வளர்ப்பதற்காக, பிறரது தொழிலை சீர்குலைக்க மாட்டேன் என விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் நல்வாழ்வு சங்கத்தினர் (எப்.என்.சி.ஜி) உறுதிமொழி எடுத்துள்ளனர்.

சென்னை போரூரை தலைமையிடமாக கொண்டு, ‘விரைவாக விற்பனையாகும் நுகர்வோர்...மேலும் காண

சென்னை நுகர்வோர் பொருட்கள் வினியோகஸ்தர் நல்வாழ்வு சங்கம் சார்பில் ஜிஎஸ்டி விளக்கக் கூட்டம்

சென்னை:

சென்னை போரூரில் உள்ள 'நுகர்வோர் பொருட்கள் வினியோகஸ்தர்கள் நல்வாழ்வு சங்கம்' சார்பில், ஜிஎஸ்டி குறித்த விளக்கக் கூட்டம் ஜூன் 18ஆம் தேதி நடைபெற்றது.

சென்னையில் போரூரை தலைமையிடமாக கொண்டு, வேகமாக விற்பனையாகும் நுகர்பொருட்கள் விநியோகஸ்தர்கள் நல்வாழ்வு சங்கம் (FAST MOVING...மேலும் காண

மேலும் செய்திகள்