தினம் ஒரு திருக்குறள் :
அண்மைச் செய்திகள்:
லங்கை
இலங்கை : முன்னாள் அதிபரை கொல்ல முயன்றவர்களுக்கு தலா 290, 300 ஆண்டுகள் சிறை!
கொழும்பு, அக்டோபர், 1 :

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைக் கொல்ல முயன்ற வழக்கில், ஒருவருக்கு 290 ஆண்டுகளும், மற்றொருவருக்கு 300 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இலங்கையில் கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, சந்திரிகா...மேலும் காண

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் ஏற்பு : இந்தியா ஆதரவு
ஜெனிவா, அக்டோபர், 1 :

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் வரைவு அறிக்கை ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்டு, அது மனித உரிமை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா.சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானத்தில், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை...மேலும் காண

இலங்கையில் கனமழை : நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
கொழும்பு, செப்டம்பர், 26 :

இலங்கையின் மத்தியப் பகுதியில் தொடர்மழையின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 2 குழந்தைகள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

இலங்கையின் பல பகுதிகளில் தொடர்மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் கொழும்புவின் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகின்றது....மேலும் காண

காமன்வெல்த் நீதிபதிகளுடன் இலங்கையில் வழக்கறிஞர்கள் குழு விசாரணை நடத்தும் : ரணில் விக்கிரமசிங்கே
கொழும்பு, செப்டம்பர், 26 :

அமெரிக்க வரைவு அறிக்கையில் கூறியுள்ளவாறு காமன்வெல்த் நாடுகளின் வழக்கறிஞர்களின் உதவியுடன் இலங்கையில் விசாரணை நடத்த இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பு நாடுகளிடையே நடைபெற இருந்த விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது....மேலும் காண

இலங்கை போர்க்குற்றம் பற்றி விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வரவேற்பு
செப்டம்பர், 24 :

இலங்கை போர் குறித்து விசாரிக்க சர்வதேச சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற ஐநா மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.

இந்நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையை...மேலும் காண

ஐ.நா.சபை அறிக்கையை நிராகரிக்க வேண்டும் : இலங்கை அரசிடம் ராஜபக்சே முறையீடு
கொழும்பு, செப்டம்பர், 23 :

இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரில் சிங்கள ராணுவம் மனித உரிமை மீறியுள்ளதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது ஐ.நா. மனித உரிமை...மேலும் காண

நாகை மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை அட்டூழியம்
கொழும்பு, செப்டம்பர், 22 :

காரைநகர் கடல்பகுதி அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர் 15 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இலங்கைக்கு கொண்டு சென்ற கடற்படையினர், யாழ்ப்பாணம் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன....மேலும் காண

மேலும் செய்திகள்